Sunday, February 6, 2022

இந்தியத்துவம் - 2

 

இந்தியத்துவம் - 2



ஏன் இந்தியத்துவம் இருக்கிற இஸங்கள் போதாதா என்று கேட்பவருக்கு சொல்வதெல்லாம் நம்முடைய முகமி  (ஐடென்டிட்டி) பல்வேறு நாடுகளாலும் கலாச்சாரங்களாலும் சிதைக்க பட்டுள்ளது. கணினித்துறையில் சொல்வார்கள் ஜாக் ஆப் ஆல் ட்ரெட்ஸ் என்று  கூலி கன்சல்டண்ட்களுக்கு, எடுபுடியாகவே ஒரு தலைமுறை  வளர்ந்து விட்டது. அதற்கு காரணமான ஒரு தனித்துவமான பிராமண சமூகம் தன்  நிலை மறந்து ஆங்கிலேயனுக்கு  குமாஸ்தாக்கள் ஆகி பெற்றது வீடு (களும்)   காரும் இன்ன பிற வசதிகளும். அதன் மூல காரணமான மெக்காலே கல்வி முறை இன்னும் உயிர்த்து தான் இருக்கிறது. இதற்கு கி பி 1792 - 1899 ஆண்டுகளின் இந்திய  பஞ்சமும் என்று ஒரு காரணம் சொல்லுபவரும் உண்டு. நம்முடைய முகம், உள்  நோக்கி பார்ப்பதற்காகவே பல மெய் ஞானங்கள் உருவாகி வளர்ந்தன. நாம் எப்போதும் நின்று நிதானமாக  அனுபவித்து வாழ்வதாகவே நம் முன்னோர்கள் இருந்தார்கள். இங்கு உருவான புத்திசமும் இன்ன பிற மதங்களும் கூட மறு பிறவியில் நம்பிக்கை உடையன, எல்லாவற்றையும் நுகர்ந்து தீர்க்கும் வெறி நமக்கு எப்போதுமே இல்லை, இது உலகெங்கும் வேற எந்த சமூகங்களுக்கும் இல்லை. நாம் எல்லாருக்கும் மூத்தவர்கள் என்பதாலேயே மூர்க்கத்திலும்  சூபியிசம் உருவாக்கி வளர்க்க முடிந்தது. நமக்கு இருப்பு பாதுகாப்பு பிரச்சனை இல்லை இன்னும் புதிய இஸங்களை உள்  வாங்கும் அளவுக்கு பரந்த மனம் படைத்ததாகவே நம் கலாச்சாரம் இருக்கிறது. இதுவே இந்தியத்துவம். இது போன்ற அறிவார்ந்த ஆழ்ந்த மூளைத்திறன் உள்ள செயல்பாடுகள் நம் தனித்துவம். அதற்காக அசோகருக்கு பின் வந்த புத்த ஜைன காந்தி வரை உள்ள முன்னெடுப்புகள் சரியாகாது; அவை  நம்மை வாழ்வு மரத்து போன சோம்பேறிகளாக்கி விட்டன. மற்ற மதங்களும் இதில் சேர்ந்து கொண்டன பாலை வனத்தை சேர்ந்தவர்களுக்கு மூர்க்கமும், காந்தி பெற்று கொண்டு வந்த அடுத்ததும் வாழ்வியல் பாவமன்னிப்பு சார்ந்தது; அது  துன்பியல் வழிபாடு, இவைகள் எப்படி ஆரோக்கியமான சமூகமாகும்? யாரும் நிறுத்தி யோசிக்க வில்லை, காந்தி நம் சமூகத்து ஞானங்களை உள் வாங்கி சத்யாகிரஹம் உருவாக்கவில்லை மாறாக அவை அமெரிக்க ஹென்றி டேவிட் தோரையு (Hendry David Thoreau) வின் சட்ட ஒத்துழையாமை (Civil Disobedience) அடிப்படையாக கொண்டது. அதுவே பின்னாளைய அவரின் எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம். மேலும் நம் குரு பரம்பரை விழிப்பாக இல்லை, உணவுக்காகவும் வசதிக்காகவும் கத்தி பயத்துக்காகவும் மாறியவர்கள் எப்படி உண்மையாக பின் பற்றுவார்கள் என்ற அக்கறை அவர்களுக்கும் இல்லை. ஏனினில்  அவைகள் தட்டையாக ஒற்றை தன்மையுடன் ஸ்தாபிக்க பட்டவை உலக போர் முடிந்தவுடன் பொருளாதார காரணங்களுக்காகவே வளர்ந்தது.  ஆக்ட்டிவ் ஆக இருந்த சமூகம் பாஸிவ் ஆக மாறியதே நம் முகமி   (ஐடென்டிட்டி)   இழப்பதற்கு மூல காரணம். வீரத்தை கை கொண்டு வெற்றி கொண்ட சோழர்கள் சாதித்தது ஏராளம். இன்னும் அவை புத்தக அறைகளுக்கு சாமானியனுக்கு குழந்தைகளுக்கும் வந்து சேர வில்லை மகா பாரதமும், ராமாயணமும்மே தடுமாறிக்கொண்டு உள்ளது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சொல்ல படாமல். மேலும் உதாரணம் வேண்டுமா? குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் வெளி வந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் கூட இன்னும் மாமன்னர் இராஜராஜனும், இராஜேந்திரனும் பட கதைகளில் வர வில்லை நாம் ஐரோப்பிய ஜேம்ஸ் பாண்ட் கதைகளை காமிக்ஸ் என்ற படித்து தீர்த்து ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. அப்படி என்றால்  நாம் நம்மை பற்றி அறியாதவாறு வளர்த்த கழகங்களும் அதன் இசங்களும் மட்டுமே முக்கிய காரணம். அது மட்டும் இல்லை உள் நோக்கி பார்ப்பவர்களை பகுத்தறிவு என்ற பல் உடைந்த கருவி கொண்டு கோரமாக அழித்தும் வருகிறார்கள். அது உண்மையான பகுத்தறிவே இல்லை என்பது வேறு  விஷயம்.


தகவல் தரவுகள் தொடர்பான விக்கி பீடியாவின் உண்மையான முகம், சமீபத்தில் அதன் நிறுவனர்களில் ஒருவர் சொன்னதை விழிப்புடன் பார்க்கவேண்டும் அது இடது சாரிகள் கூடாரமாய் விட்டது அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறி என்று கூறியிருக்கிறார் (பார்க்க பின் இணைப்பு). வரலாறுகள் இந்தியாவில் எழுதப்படவே இல்லை அவை எழுதப்பட்டது வேறு காரணங்களுக்காக, அவை இன்றும் விக்கி பிடியாவிற்கும் பொருந்தும். விக்கி சொல்லும் விதம் பாப்போம் நமக்கு இதிஹாசங்கள் என்றால் உண்மையில் நடந்தவைகள் என்று அர்த்தமாகும்  படி நமக்கு கற்பிக்க பட்டவை எல்லாம் எப்படி தட்டையாக வரலாறு ஆகும்? அதில் சொல்ல பட்டது முதல் வரி இதுதான் "இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்(Pre-historic Period)", இதுதான் அவர்களின் அளவுகோல் நாம் சொல்வது வேறு அவர்கள் குறிப்பால் எழுதியதாக கொண்டது வேறு. நம்மிடையே புராணங்களும் உண்டு அது வேறு வகை. எப்படி உண்மையில் நடந்தது கட்டு கதை என்ற அளவுக்கு மனசலவை செய்யப்பட்டது என்பது கூர்ந்து அறியவேண்டியவை.

நம்மிடையே ஆழ்ந்த குறிப்புகள் உண்டு வரலாறுக்கும் மேலாக அதை நாம் கடை பிடித்து வந்துள்ளோம். இன்றும் நம்மிடையே நீத்தோர் கடன் செய்யும் சாங்கியம் உண்டு அதில் பல தலை முறை  மூத்தோர்கள் ஆண்களையும் பெண்களையும் பெயர் சொல்லி அழைத்து தர்ப்பணம் செய்யும் முறை உண்டு. அதை தலைமுறைகளுக்கும் இன்று நினைவு வைத்து இருப்பவர்கள் இருக்கிறார்கள் . அதில் பிராமணர்கள் இன்னும் ஒரு படி மேல் அவர்களின் கோத்திரங்கள் இறந்த திதி இன்ன பிற விஷயங்களை கூட மனத்தால் நினைவு வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தி உள்ளார்கள். பிற் காலங்களில்  சுவடிகளும் கல்வெட்டு முறையும் இருந்தது இருக்கிறது, இருந்தும் நாம் பின் தங்கியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்தியாவில் பிரின்டிங் பிரஸ் முதன் முதலில் மிசிநரிகளால் ஜெர்மனியில் இருந்து சீகன் பால்க் வழியாக கி பி 1705 ல்  தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டது. அது அவர்களின் பிரசுரங்களுக்கே பைபிளுக்கே  முன்னுரிமை அவர்களின்  பல் வேறு மொழி பெயர்ப்புகள் தமிழகத்தை வலம் வந்தன. அவர்கள் நம்மை அவர்கள் மொழி படிக்க சொல்லி பெரும் திணிப்பே நடந்தது (பார்க்க பின் இணைப்பு). அதற்கு பின் நடந்த இதே விஷயம் தொடர்பாக மற்றொரு நிகழ்வையும் இங்கு பதிவு செய்கிறேன் தமிழ் தாத்தா திரு உ வே சாமிநாதையர் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் கொஞ்ச நஞ்சம் அல்ல உண்மையான தமிழ் வரலாறையும் சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் அச்சில் ஏற்ற தடையே இருந்தது. மகா கொடுமையாக தமிழகத்தின் சாபங்கள் நீதிகட்சியும் அழிப்பு கழகங்களும் அதே காலத்தில் (1878 -1942) தமிழ் தமிழ் என்று முழங்கி கொண்டு இருந்தார்கள் ஒரு குண்டூசி முனை அளவு கூட அவர்கள் தமிழ் வளர்க்க வில்லை இதை எந்த வரலாறும் பதிவும் செய்ய வில்லை.  அவர்கள் வேலைக்காரி கதை எழுதும் பொது இங்கு ஐம்பெரும் காப்பியங்கள் முதற்கொண்டு எல்லா பக்தி இலக்கியங்களும் சுவடிகளில் இருந்து பதிப்பிக்க பட்டன. அந்த தீர்க்க தரிசிக்கு நாம் என்ன செய்துவிட்டோம்? நம் கடவுள் இல்லை என்று சொன்னவனுக்கு சிலை வைத்தோம் நம் வயிறு வளர்த்தோம் ஆங்கிலேயனுக்கு அடிப்பொடிகளான கழகங்களுக்கு  அடிமையானோம். நமக்கு என்ன முகமி இருக்கிறது? அந்த சாதிய  சேர்ந்தவருக்கு அவர் நல்ல அளவுக்கு  அபிரிமிதமா சேவை செய்தாலும் என்ன கைம்மாறு செய்தோம்? அந்த இனத்தவர்களை சமயத்தவர்களை இழித்தும் பழித்தும் பேசினோம். தமிழை, மொழியை  வாழவைத்தது இதில் சைவ ஆதீனங்களுக்கும் சமமான பங்கு உள்ளது.

இதில் சொல்ல மகா ஞானி பாரதிக்கும் பெரும் பங்கு உள்ளது, ஆங்கிலேயர் அடக்கி வைத்திருந்தாலும் அவர்கள் மொழியில் நம்மவருக்கு துவேஷம் இல்லை, அவன் சொன்னான் "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!", ஷெல்லி ஐயும், பைரனையும் கரைத்து குடித்தார், ஷெல்லி  தாசன் என்று சொல்லி கொண்டார் அதேபோல் நம் செல்வங்களை மொழி பெயர்த்தார் வேதங்களும் பதஞ்சலி சூத்திரமும் பகவத்கீதையும் வட மொழியிலிருந்து தமிழுக்கு மேலும் அவரது கவிதைகளை சிந்தனைகளை ஆங்கிலத்துக்கும் என்று, மொழி வளர்த்தல் என்பது இதுவே அல்லவா? நம் சக மொழி ஹிந்தி மொழி மீது வெறுப்பு யாருக்காவது இருக்குமாயின் இந்திய சுதந்திரம் கிடைத்திருக்குமா என்பது கேள்வி குறி?

நம் வரலாறு  சரியாக திருத்தி தேசம் முழுமைக்கும் எழுதப்பட வேண்டுமா? நமக்கு ஒரு தேசம் முழுமைக்குமான முகமி (ஐடென்டிட்டி) வேண்டுமா? முதலில் தொடர்பு மொழியை சங்கிலி போல் தேசம் முழுதும் பிணைத்து விட்டு தான் இதில் இறங்கவே வேண்டும்!  சாஹித்ய அகாடெமி ஒரு சடங்கு போல் உள்ளது மக்கிளிடையே புழங்கும் ஒரு சாதனம் செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை பார் என்பவருக்கு இதிலும் ஒரு வழி உள்ளது, தற்பொழுது டெக்நாலஜி வளர்ந்து உள்ளது, அங்கு சினிமா தியேட்டர் சென்று பார்ப்பவர் இதை அறிவார் அவர்களுக்கும் இதே பிரச்சனை உள்ளது அல்லவா ஸ்பானிஷ் இங்கிலிஷ் என்று மொழி மாற்றம் ஒரு சேவை ஆக உங்கள் ஹெட் போனில் டவுன்லோட் செய்து உங்கள் மொழியில் திரைப்படத்தை ரசிக்கலாம் அதன் பெயர் சவுண்ட்ஃபி (SoundFI) என்று ஒன்று மைலிங்கோ (mylingo) என்று ஒன்று, நம்மிடையே உள்ள எண்ணற்ற மொழிகளுக்கு இது வர பிரசாதம் மக்களிடையே கலாச்சார பாலங்கள் ஏற்படும், வட மொழி நெருக்கமாகும்  அல்லவா? (பார்க்க பின் இணைப்பு)

இந்தியத்துவம் - 1

இந்தியா வேறெப்போதும் இல்லாத வகையில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கிறது பெரும்பாலோனோர் ரஜினி கமல் சினிமா ரசிகர் போன்று தம்மை சங்கீ மங்கி என்று பிரித்து அடித்து கொள்வதை தவிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆக்கபூர்வமான ஆழ்ந்த கருத்துக்கள் வெளியே வருவதே இல்லை. இந்தியா இன்னோவேஷன் 2020 (பார்க்க பக்கம் 211 பின் குறிப்பில் இணைப்பு சுட்டி) அறிக்கை கூறுவது இதுதான், நம் தமிழகம் அறிவுபூர்வமான வேலைவாய்ப்புகளில் 16.09 மதிப்பீட்டில் சிவப்பில் பின்தங்கி உள்ளது. குறிப்பாக நம்மை விட மனிதவள எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கையே கொண்டிருந்தும் அருகே இருக்கும் ஆந்திரா முன்னேற்ற பாதையில். இத்தனைக்கும் நம் மாநிலத்திலும் கடந்த பத்தாண்டுகளாக ஒரே தோழமை கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. வேறொரு தளத்தில் மெக்கின்ஸி அறிக்கை 2012 இல் இருந்து இன்னோவேஷன் வழியில் மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) பங்களிக்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை இறங்கு முகத்தில் இருக்கிறது என்கிறது. (பார்க்க பக்கம் 17 பின் குறிப்பில் இணைப்பு சுட்டி) மேலும் இதை பிரதி பலிக்கும் விதமாக எழுத்துலகம் தம்மை இதிலிருந்து விலக்கி தீரா மவுனத்தில் இருக்கிறது. கொரோனா வைரஸ் ஒரு சப்பை கட்டு அதுவே மருந்து நம் சமூகத்திற்கு எனத்தெரியாமல் ஒரு தலைமுறை வழிகள் இல்லா காட்டில் அலைந்து திரிகிறது. 

 ஒரு சாராருக்கு நம் நாட்டின் குரல் வெளியே பலத்து சுதந்திரமாக தெரிவதில் எந்த ஆசையும் நோக்கமும் இல்லை பெட்ரோல் விலை குறையனும் ஆட்டோகிராடிக் அரசியல் போகணும் அதுவே குறிக்கோள். இதுவரை சலூன் கடை முதல் திண்ணை டீ கடை வரை ராணுவ ஆட்சி வந்தாதான் நாடு உருப்படும் என்று எல்லாரும் வருந்தி அழைத்தது நினைவில் இல்லை. இதற்கு முன் தெரிந்த சுகாதாரம் தண்ணீர் மின்சாரம் வறுமை பிரச்சனை பேச காணும் . நாம் வேறு ஒரு தலைமையில் ஒரு குடும்ப அரசியல் டைனஸ்டி விட்டு வெளியே வந்து சாதித்து இருக்கிறோம் என்ற பார்வையே இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

 ஏன் நமக்கு பூரண சுதந்திரம் வேண்டும். எல்லாவற்றிற்கும் அமெரிக்க ஊடறுத்தல் இடையே நாடு இருந்தது. இங்கிலாந்து கொள்ளை அடித்து கொண்டு சென்ற செல்வங்களோடு நம் சுதந்திரமும் போய் இருந்தது.வெறும் உடலுக்கே காந்தியால் அதை பெற்று தர முடிந்தது. நம் ஆன்மாவை தொலைத்து பெற்ற ஜீவனாம்சம் அது. சில நுண்ணரசியல் உதாரணம் பார்ப்போம். ஜக்கி வாசுதேவ் என்று கூகிள் தேடு பொறியில் தேடினால் வலது பக்கம் அவரது புகைப்படம் கீழே இந்தியன் ஆதர் என்றே வருகிறது. ஏன் அவர் யோகி என்று அறியப்பட வில்லையா ? எண்ணற்ற பல மழுப்பல் களை பார்க்கலாம். கவனம், அடுத்த தலைமுறை இணையத்தில் இருக்கிறது.அவர்களுக்கு நெட்டில் என்ன வருகிறதோ அதுவே வேத வாக்கு, ஏன் தன்னை ஹிந்து நேஷனலிஸ்ட் என்று கூறி பிரதமர் ஆனாரே அவர்க்கும் தான் இன்னும் உரைக்கவில்லை நம் நாட்டின் எண்ணற்ற குருமார்கள் செய்த தியாகம் தான் நம் தேசம் என்று தெரியவில்லை . ஏன் இதுவரை குரு பரம்பரை பற்றி எந்த தகவுகளும் அரசால் அமைக்க பட வில்லை. எல்லாவற்றுக்கும் சட்டத்தை கூறி சப்பை கட்டி எங்கே போகிறோம் என தெரியவில்லை. மனிதர்கள் முக்கியம், தத்துவங்கள் மாறிக்கொண்டே இருக்கும் நம் நாட்டின் ஆன்மா அது. நம்மில் பலருக்கு யோகிக்கு எதுக்கு காசு என்று கேட்கிறார்கள் எல்லாமும் வளரும் வளரனும் அவர்களை போஷிக்க எந்த அரசனும் தற்போது இல்லை என்று மறந்து விடுகிறது. அரசிடம் இருந்து மதத்தை பிடிங்கி எறிந்தாயிற்று அவர்கள் சுய சார்பில் இருக்கிறார்கள் அதுவும் சட்டத்திற்கு உட்பட்டு, வசதியாக அது பலருக்கு உறுத்தவில்லை. 

 சாமிகள், யோகி, முனிவர்கள், சித்தர்கள் , ஞானிகள், சாதுக்கள், சாயபுகள் என்று ஆன்மீக குருவிற்கு இவ்வளவு வார்த்தைகள் எந்த கலாச்சாரத்திலாவது உண்டா? ஆம் வெறும் சொற்கள் அல்ல அது ஒரு கட்டமைப்பு அரசின் அறம் சார்ந்த விஷயங்களில் செயல் பட அது ஏற்படுத்த பட்டது. இந்தியா வேறு தொன்மங்களான புத்தமும் ஜைனமும் பீடித்த நாட்களிலே நம்மை மீண்டும் பக்தி நோக்கி கொண்டு வந்தது ஆதி சங்கரர் தலைமையில் செயல்பட்ட மடங்களே. மகா பாரத போருக்கு பின் அரசர்கள் தம் தர்மங்களை துறக்கவில்லை ஆனால் அசோகர் அதை செய்யும்படி ஆனதற்கும் ஒரு ஆன்மீக குருவே காரணம். அவர்கள் ஏன் வேண்டும், எல்லாரும் சித்தி அடைந்து முக்தி பெறவா? இல்லை. அவர்கள் தான் அதிகார தூண்கள் தொலை நோக்கி பார்க்கும் தலைவர்கள். அவர்கள் தானே இந்தியா என்ற பெயர், கொடுத்தது; உனக்கு இருந்த பெயர் பாரதம் என்று உறக்க கத்த வேண்டியிருக்கிறது. கோவில்கள் சமுதாய கூடங்கள் மற்ற மதங்களை போன்று பிரார்த்தனை தளம் இல்லை என்று போராடி எழுச்சியை ஊட்ட வேண்டியுள்ளது. அவ்வப்போது மக்களை மாக்களாய் மாறாதிருக்கும் ஷாக் ஆப்சர்பர் போன்று சமூகத்தில் செயல் பட வேண்டி நாம் இதுவரை இயங்கி உள்ளோம். வரலாறும் கூறும் அது; அவ்வை முதல் கருவூரார் வரை அதை தானே செய்தார்கள். அவர்கள் அரசில் தலையிடுகிறார்கள் என்று எந்த குறிப்பாவது குமுறலாவது எங்கேனும் இருந்ததா? அதற்கு எதிராக கொண்டாடியதற்கான தடயங்கள் நெடுக; நிற்க இப்போது என்ன மாறிவிட்டோம் ? ஏன் அவ்வாறு ஆனது ஆன்மிகம் அரசின் அரங்கத்தில் இல்லை, விரட்டப்பட்டது அதுவாவது எல்லா ஆன்மிகங்களும் விரட்ட பட்டதா சம தூரத்தில் வைக்க பட்டதா என்றால் கோழைகள் ஒற்றுமை கண்ணி சிதைந்த இடத்தில் சிறு பான்மை என்று உள்ளிழுக்க படுகிறது. ஆழ்ந்து கவனியுங்கள் சிறு பான்மை இனம் இல்லை. இது வெளியே தெரியும் பொது பல இனம் குழுக்களாக நாட்டை விட்டு வெளியேறி ஒரு தலை முறை ஆகிவிட்டது. ஆம் அரசில் மத குருக்கள் இருக்கும் சுதந்திரம் இனிமேல் பேச படவேண்டும். 

 இந்தியா தான் செலவழிக்கும் (ஆம் ழி!) பெரும்பாலான தொகை எரி பொருள் தேவைக்காகவே. இதற்காகவே உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி சம்மேளனத்தில் இந்தியா சிறந்த பங்களிப்பை செய்கிறது. ஆனால் மறு பக்கம் வாகன உற்பத்தியும் அதை சாமானியர் பெறுவதிலும் இருக்கிற வளர்ச்சி அதை தீர குடிக்கும் பெட்ரோல் பற்றி வசதியாக மறந்து விடுகிறோம். சீனா மிதி வண்டிக்காக எடுத்த முயற்சியில் பத்தில் ஒரு பங்கு கூட நாம் எடுக்கவில்லை. இன்னும் நாம் மிதி வண்டி பாகங்களை அவர்களிடமிருந்து இறக்குமதியும் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக அறிக்கை எல்லாம் படிக்க வேண்டாம், பக்கத்து கடையில் விசாரித்தால் தெரியும் நம் ஸ்திதி. பெட்ரோல் அரசியல் விட்டு வெளியே வர வேண்டும் என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தி ஆட்சிக்கு வந்த நிதின் இப்போது அமேரிக்கா விடமே பெட்ரோல் வாங்கு கிறார். ஜெட்ரோபா போன்ற முன்நிகழ்வுகள் குழி தோண்டி புதைக்க பட்டு சீன பேட்டரி (முதன் முதல் சுய சார்பு பேட்டரி உற்பத்தி பற்றிய தகவு பார்க்க ப்ளூம்பெர்க் கட்டுரை சுட்டி பின் இணைப்பில்) புடித்து தொங்கி அடி வாங்கியது பிரதமருக்கு கசப்பு அனுபவம். சுய சார்பு இன்னும் எட்டா கனவு. ஒரு சில முன்னெடுத்தல் தவிர தீவிர விழிப்புணர்வு விளம்பரமும் ஜெட்ரோபா சாகுபடிக்கு செய்யப்பட வில்லை. பேட்டரி வாகனங்கள் சோலார் பேனல்கள் பெற்ற மானியம் சுய சார்பு ஜெட்ரோபாவிற்கு கிடையாதா? அவை சீனாவுக்கே உதவுகிறது. பயோ எரிபொருள் சாகுபடி பற்றிய ஆய்வு (பார்க்க பக்கம் 5 பின் இணைப்பில் சுட்டி) ஒன்றில் இந்தியா இன்னும் உணவு உற்பத்தி தன்னிறைவிற்கே அரசு முன்னுரிமை கொடுப்பதாக கூறுகிறது. ஆக இன்னும் நாம் உணவை வீணடிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆம் உணவை உற்பத்தி பண்ணி வீணடிக்கும் சுதந்திரம் பெற்றுள்ளோம், அவர்களை பாதி பேர் ஏன் ஜெட்ரோபா பயிரிட கூறக்கூடாது ? உணவுக்கு செயல்படும் உற்பத்தி குறைந்தால் டிமாண்ட் அதிகரித்து தானே வீணடிப்பில் இருந்து மீளுவோமே? 

 சுதந்திரமான மொழி பற்றியும் மொழிவோம் பிழிவோம்; பாரதம் சுதந்திரத்திற்கு முன்பே பிரிக்க பட்டது மதத்திற்காக. மூன்று மாகாணங்களாய் இருந்தது பின் மேலும் பிரித்து சிதைக்க வசதியாக மொழியை மொழிந்தது யார் செய்த தவறு ? அதான் பிரித்தாயிற்றே என்று ஏன் படேல் சொன்னதை மற்ற இருவரும் ஏற்கவில்லை? அது தானே வசதியாக போய் தமிழ் நாடு என்று வந்து நிற்கிறது? எது நாடு தனியே போராடினீரா ராணுவம் உண்டா ? தெலுங்கர்கள் வந்து தொலைக்கவில்லை என்றால் எல்லா கோவில்களும் தரை மட்டம் ஆயிருக்கும். பிரதேசம் அளவு இருந்து கொண்டு நாடு என்று கூப்பிட்டதாயாவது நிறுத்தினீர்களா? அப்படியே வைத்து கொள்ளுவோம் மொழி எங்கள் உணர்வு, அடித்தொண்டை உள் வயிற்றில் இருந்து கத்துகிறார்கள். அப்படியாவது மொழி வளர்ந்ததா? நாடு முழுவதும் ஆங்கில வார்த்தைகள் உள்ளே வந்து விட்டது. அடுத்த தலைமுறைக்கு வசனம் பேச மட்டும் திரைப்படம் உணர்வூட்டுகிறது. அது துரதிஷ்டமாய் அரசை எதிர்த்து போராட மட்டும் உபயோகம். ஆனால் சொல்வளம்? தேங்கி மடிந்து அழிந்து வருகிறது. உதாரணம் வேணுமா? இன்று விற்க படும் குழந்தைகளுக்கான வார்த்தைகள் - படம் (பிக்ஷனரி pictionary ) புத்தகங்கள் விஸ்தாரமாக ஒன்று கூட இந்திய மொழியில் இல்லை. 5000 வோர்ட்ஸ் என்று ஆங்கிலம் பிரெஞ்சு அரபி என்று எந்த பிற மொழி எடுத்தாலும் இருக்கிறது அவை ப்ளிப்கார்ட்டியிலேயே விற்க படுகின்றன. தமிழ்? கன்னடம்? ஹிந்தி? ம் ஹும். அடுத்த தலைமுறைக்கு தமிழ் எப்படி வளரும்? மற்ற புத்தகம் எப்படி விற்கும்? நாம் எதார்த்தத்தை பேசுவோம்? ஏன், இப்படி இல்லாத எப்படி மொழி வளர்க்க போகிறீர்கள் அவர்கள் புத்தகம் படிக்க இழுத்து வர வேண்டி உள்ளது. சொற்கள்? தெரியாமல் எவ்வளவு பள்ளியில் வேற்று மொழியை எடுத்து கொள்(ல்) கிறார்கள் என்றாவது ஒரு எட்டு பார்த்து வருவது நலம். காதால் கேட்பதும் நாராசமாக ஒலிக்கும் கலப்பட வழக்கு மொழி. தமிழை கன்னடத்தை அரசியலுக்கு குத்தகை எடுத்தவர்களை நிற்க வைத்து கேட்கவேண்டும் . தமிழகத்தில் கலாச்சாரத்தை சிதைக்கும் வேலைக்கு இந்த மொழி, அறிவு கருவி ஆயிற்று. அதை எதிர்த்தே கம்பன் கழகம் போன்றவை ராஜாஜி காலத்தில் நிறுவப்பட்டவை பிறகு இறகொடைந்த பறவையாய் இன்று. ஆழ்வார்களும் நாயன்மார்கள் சித்தர்களும் மொழி வளர்த்த கலாச்சாரம். அதை வேரோடு சாய்க்க தமிழ் - மொழி இன்று பயன் படுகிறது . அபூர்வமாய் வேல் என்று முருகவேள்(ல்) புதுப்பிக்கப்பட்டது, காலம் கடந்தது என்று தான் சொல்லவேண்டும். மொழியை கருவியாக கையாண்டவன் இன்றைக்கு தலைவன் என்று தரம் தாழ்ந்து போனோம். சேர சோழ பாண்டியன் வம்சங்களுக்கு வீர அவமானம். மிச்சம் சொல் குரு ஜெயமோகனுக்கு சமர்ப்பணம், அவர் தானே மொழியை வல்லமையாய் கையாள்கிறார் தலைவராக்கி விடுவோம்.

 இரு மொழி கற்றவனுக்கு இரு மனிதனுக்கான ஆகிருதி உண்டு. அது இங்கு இந்த மாநிலத்தில் தான் அவமானப்படுகிறது பானி பூரி விற்பவன் மொழி எனக்கு வேண்டாம். என்ன மாதிரி மொழி வளர்ச்சி, மன முதிர்ச்சி இது? எப்படி வளர்த்திருக்கிறார்கள் என்று பாருங்கள் ஏன் நம்மவர்கள் அரபு நாடுகளில் உங்களுக்கு அவமானம் என்று கருதும் வேலைகளில் இல்லையா? இங்கேயே பிறந்ததினால் எங்கும் வேலைக்கு போக கூடாதா? செய்யும் தொழிலே தெய்வம், இப்போது வேண்டாமா? எத்தனை வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்கள் இந்திய தொடர்பு மொழி இல்லாமல் அவதி படுகிறார்கள் என்று தெரியுமா? ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் அளவளாவ முடியாமால் ஆங்கிலத்தில் என்ன உணர்ச்சியை பங்கிட்டு கொள்ளவேண்டும்? கிட்டத்தட்ட ஒரே சாப்பாடு பண்டிகை குடும்ப முறை தெய்வங்கள் கூட ஆனால் உளமார பேச முடியாது. என்ன சாதித்து விட்டோம்? இதற்கும் ராணுவ ஒழுங்கிற்கான படேல் வேண்டுமா? உங்கள் வீட்டில் கணிப்பொறி துறையில் வேலை பார்ப்பவர் இருப்பார்கள் கொந்தளிப்பை கேட்டு தெளிவது பரிந்துரைக்க படுகிறது. இதில் என்ன வருத்தம் என்றால் அந்த துறையில் உள்ளவர்கள் கூட இதை அறியாவண்ணம் மனச்சலவை செய்யப்படுகிறார்கள். கடைசி வரை வேறு வேறு நாட்டவர் போலே வாழ்ந்து மடிய வேண்டுமா? பிரித்தாள்பவனுக்கு அன்று தேவையாய் இருந்தது இன்றும் வேண்டுமா? அதையும் ஒரு யோகியை விட்டு மொழியச்சொல்வோமா, அவர் பொருத்தமானவர் தாமே!

இந்தியத்துவம் - 2

  இந்தியத்துவம் - 2 ஏன் இந்தியத்துவம் இருக்கிற இஸங்கள் போதாதா என்று கேட்பவருக்கு சொல்வதெல்லாம் நம்முடைய முகமி  (ஐடென்டிட்டி) பல்வேறு நாடுகளா...